
இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் ஐ.பி.எல் போட்டிகள் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. எஞ்சியிருக்கும் ஐ.பி.எல் போட்டிகள் எப்போது நடத்தப்படும் எனும் கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.
இதற்கு முன்பும் இரண்டு முறை ஐ.பி.எல் இதே மாதிரி ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. 2020 ஆம் ஆண்டில் கொரோனா காரணமாக சீசன் தொடங்குவதற்கு ஒரு சில நாள்களுக்கு முன்பாக தொடர் ஒத்திவைக்கப்பட்டது.
அந்த சீசன் செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட்டிருந்தது. அதேமாதிரி 2021 சீசனின் முதல் பாதி இந்தியாவில் மார்ச், ஏப்ரலில் வழக்கம்போல நடந்திருந்தது.
திடீரென கொரோனா இரண்டாம் அலை உச்சம் பெற, தொடர் ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர், இரண்டாம் பாதி ஆட்டங்கள் செப்டம்பர், அக்டோபரில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்திருந்தது.
ஆக, இந்த மாதிரியான சூழல் ஐ.பி.எல் க்கு புதிதல்ல. இன்னும் 12 லீக் ஆட்டங்கள் எஞ்சியிருக்கிறது. ப்ளே ஆப்ஸ் மற்றும் இறுதிப்போட்டி சேர்த்து 4 ஆட்டங்கள். ஆக, மொத்தமாக 16 போட்டிகள் நடத்தப்பட வேண்டும்.
இந்த மே மாதத்துக்குள் இத்தனைப் போட்டிகளை மீண்டும் ஒருங்கிணைத்து நடத்த முடியாது. ஜூன், ஜூலையிலும் அதற்கான வாய்ப்புகள் இல்லை. ஏனெனில், ஜூன் முதல் வாரத்தில் இந்திய அணி இங்கிலாந்து சென்று 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது.
அது மிக முக்கியமான தொடர். அதனால் அந்த இரண்டு மாதங்களும் வாய்ப்பில்லை. அதை முடித்த பிறகு வங்கதேசத்துக்கு ஓடிஐ மற்றும் டி20 தொடரில் ஆட இந்திய அணி திட்டமிட்டிருக்கிறது.
அதன்பிறகு ஆசியக்கோப்பை. இவை ஆகஸ்ட், செப்டம்பரில் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. ஆனால், இந்தத் தொடர்கள் நடக்குமா என்பதில் தெளிவில்லை.

வங்கதேசத்துக்கு எதிராகவும் ராஜாங்கரீதியிலான பிரச்சனைகள் இருப்பதால், இந்திய அணி வங்கதேசம் செல்லுமா என்பது உறுதியாகவில்லை. அதேமாதிரி, ஆசியக்கோப்பையில் பாகிஸ்தானோடு ஆட இந்தியா விரும்பாது.
அதனால் அந்தத் தொடரும் சந்தேகமே. ஆக, இந்த ஆகஸ்ட், செப்டம்பரில் எஞ்சியிருக்கும் ஐ.பி.எல் போட்டிகளை நடத்த பிசிசிஐ திட்டமிடலாம்.
இந்திய வீரர்களுக்கு அந்த சமயத்தில் தொடர்கள் இருக்காது. ஆனால், மற்ற நாட்டு வீரர்களுக்கு அவர்களின் சர்வதேசப் போட்டிகள் இருக்குமே என்றால், எந்த கிரிக்கெட் போர்டும் ஐ.பி.எல் க்கு தங்களின் வீரர்களை அனுப்பமாட்டோம் எனும் முடிவெடுட்டும் நிலையில் இருக்கும்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs