
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பல்வேறு அமைச்சகங்களின் செயலர்கள் அடங்கிய உயர்நிலைக் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. அப்போது செயல்பாட்டு தயார் நிலைக்கான அரசின் உறுதிப்பாட்டை பிரதமர் மோடி எடுத்துரைத்தார்.
இதுகுறித்து பிரதமர் அலுவலகம் மேலும் கூறியதாவது: தேசிய பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டுத் தயார் நிலைக்கான அரசின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் வேளையில், விழிப்புணர்வு மற்றும் தகவல் தொடர்பில் தெளிவாக இருக்க வேண்டும். சிவில் பாதுகாப்பு வழிமுறைகளை வலுப்படுத்துதல், தவறான தகவல்கள் மற்றும் போலிச் செய்திகளை கண்டறிந்து அவற்றை எதிர்கொள்வது மற்றும் முக்கியமான உள்கட்டமைப்பின் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்து இந்த கூட்டத்தின் போது விரிவாக விவாதிக்கப்பட்டது.