
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஒரு வாரக்காலத்திற்கு ஒத்திவைக்கப்பட்டிருப்பதாகப் பிசிசிஐ அறிவித்திருக்கிறது.
ஐ.பி.எல்.தொடரின் 58-வது லீக் போட்டி இமாசலப் பிரதேசத்தின் தரம்சாலாவில் நேற்று(மே9) நடந்தது. இதில் பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதின.
பஞ்சாப் அணி 10.1 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 122 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டம் கைவிடப்பட்டது. பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக போட்டி கைவிடப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வருவதால் ஐபிஎல் போட்டிகள் தொடர்ந்து நடத்தப்படுமா? என்று சந்தேகம் எழுந்த நிலையில் பிசிசிஐ இன்று முக்கிய ஆலோசனையை மேற்கொண்டது. இந்நிலையில் ஆலோசனையின் முடிவில் வீரர்கள் மற்றும் ரசிகர்களின் பாதுகாப்பு கருதி ஐபிஎல் தொடர் தேதி குறிப்பிடாமல் ஒரு வாரக்காலத்திற்கு ஒத்திவைக்கப்பட்டிருப்பதாகப் பிசிசிஐ அறிவித்திருக்கிறது.

பிசிசிஐ, “பெரும்பாலான அணி உரிமையாளர்கள் தங்கள் வீரர்களின் கவலை மற்றும் உணர்வுகளையும், ஒளிபரப்பாளர், ஸ்பான்சர்கள் மற்றும் ரசிகர்களின் கருத்துக்களையும் தெரிவித்ததைத் தொடர்ந்து, அனைத்து முக்கிய பங்குதாரர்களுடனும் உரிய ஆலோசனைக்குப் பிறகு ஐபிஎல் நிர்வாகக் குழு இந்த முடிவை எடுத்திருக்கிறது.
நமது ஆயுதப் படைகளின் வலிமை மற்றும் தயார் நிலையில் பிசிசிஐ முழு நம்பிக்கை வைத்திருக்கும் அதே வேளையில், அனைத்து பங்குதாரர்களின் கூட்டு நலனுக்காகவும் செயல்படுவது விவேகமானது என்று வாரியம் கருதியது. இந்த முக்கியமான கட்டத்தில், பிசிசிஐ தேசத்துடன் உறுதியாக நிற்கிறது.
இந்திய அரசு, ஆயுதப்படைகள் மற்றும் நமது நாட்டு மக்களுடன் நாங்கள் எங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்துகிறோம். சமீபத்திய பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் பாகிஸ்தானின் ஆயுதப்படைகளின் தேவையற்ற ஆக்கிரமிப்புக்கு உறுதியான பதிலடியை வழிநடத்தும் போது, ஆபரேஷன் சிந்தூர் கீழ் நாட்டைப் பாதுகாத்து ஊக்குவித்து வரும் நமது ஆயுதப்படைகளின் துணிச்சல், துணிச்சல் மற்றும் தன்னலமற்ற சேவைக்கு வாரியம் வணக்கம் செலுத்துகிறது” என்று பிசிசிஐ தெரிவித்திருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs