
பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் அசிம் முனிரின் குற்றச்சாட்டுக்கு , இந்தியா கர்னல் சோபியா குரேஷி மூலம் தக்க பதில் அளித்துள்ளது என காங். எம்.பி சசி தரூர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது குறித்து சசி தரூர் கூறியதாவது: இந்துக்களும், முஸ்லிம்களும் ஒன்றாக இணைந்து வாழ்வது சாத்தியமற்றது என பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் அசிம் முனிர் கூறினார். அதற்கு ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பு மூலம் பாக். ராணுவ தளபதிக்கும், உலகத்துக்கும் இந்தியா சரியான பதில் அளித்துள்ளது. பத்திரிக்கையாளர் சந்திப்பில் பங்கேற்ற வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி காஷ்மீரி பண்டிட் சமூகத்தை சேர்ந்தவர்.