அணு ஆயுத பலம் பொருந்திய இரண்டு அண்டை நாடுகளுக்கு இடையிலான மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. பாகிஸ்தான் ராணுவம் நேற்றிரவு (08/05/2025) மற்றும் இன்று காலையில் (09/05/2025) ட்ரோன்கள் மற்றும் பிற ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த புதன் அன்று இந்தியா பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் தாக்கியது.

பாகிஸ்தான் தாக்குதல்

இதில் தங்கள் நாட்டின் குடிமக்கள் இறந்ததாக பாகிஸ்தான் கூறியது. ஆனால் இந்தியா தீவிரவாத முகாம்கள் மட்டுமே தாக்கப்பட்ட எனக் கூறியது. இந்த தாக்குதலுக்குப் பிறகு இரண்டு நாடுகளுக்கும் இடையிலான மோதல் அதிகரித்துள்ளது.

இரு நாடுகளும் எல்லை தாண்டிய துப்பாக்கிச் சூடு, ஷெல் தாக்குதல்கள், வான்வழி ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் தளம் தெரிவித்துள்ளது.

இரு நாடுகளிலும் இணைந்து சுமார் 4 டஜன் மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் தெரிவிக்கிறது. எனினும் பாகிஸ்தான் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துவருகிறது.

பாகிஸ்தான் பல இடங்களில் போர் நிறுத்தத்தை மீறிய தாக்குதலில் ஈடுபட்டதாக இந்தியா தெரிவித்துள்ளது. மீறல்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டதாகவும் ட்ரோன் தாக்க்குதல்கள் திறம்பட முறியடிக்கப்பட்டதாகவும் இந்தியா தெரிவித்துள்ளது.

ஆனால், “பஞ்சாப் மாநிலம் பதான்கோட், காஷ்மீரில் ஶ்ரீநகர் பள்ளத்தாக்கு, ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்சல்மார் ஆகிய இடங்களில் தாக்குதல் நடத்தவில்லை” என பாகிஸ்தான்தெரிவித்துள்ளது.

“தாக்குதல் நடத்தப்பட்டதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை, அரசியல் நோக்கம் கொண்டவை” என்றும் பாகிஸ்தான் கூறியுள்ளது.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *