
பஞ்சாபில் இந்திய எல்லைக்குள் ஊருவிய பாகிஸ்தானியர் சுட்டுக் கொல்லப்பட்டார். பஞ்சாப் மாநிலத்தில் பாகிஸ்தானுடனாட சர்வதேச எல்லையில் எல்லைப் பாதுகாப்பு படை (பிஎஸ்எப்) வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் பஞ்சாபின் பெரோஸ்பூர் பகுதியில் புதன்கிழமை நள்ளிரவில் பாகிஸ்தானியர் ஒருவர் இந்திய எல்லைக்குள் ஊடுருவுவதை கண்ட பிஎஸ்எப் வீரர்கள், அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் அவர் உயிரிழந்தனர். அவரது உடல், பஞ்சாப் போலீஸார் வசம் ஒப்படைக்கப்பட்டதாக பிஎஸ்எப் அதிகாரி ஒருவர் கூறினார்.