
புதுடெல்லி: இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் நிகழும் மோதலால் அங்கு வாழும் பாம்புகளும் பாதிக்கப்பட்டு அவைகள் இடம்மாறித் தவிக்கின்றன. பாம்புகளை மீட்கும் பணியில் எஸ்ஒஎஸ் எனும் சர்வதேச அமைப்பின் ஜம்மு காஷ்மீர் பிரிவு ஈடுபட்டுள்ளது.
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது. இதனால், ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியில் வாழும் வனவிலங்குகள் எதிர்பாராத துயரங்களை சந்தித்து வருகின்றன. காஷ்மீர் போன்ற உணர்திறன் மிக்க பகுதிகளில், மனித வாழ்விடங்கள் இயற்கையான வாழ்விடங்களுடன் ஒன்றுடன் ஒன்று இணைந்துள்ளன. அங்கு போர் பதற்றம் ஏற்பட்டது முதல் சர்வதேச வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பான எஸ்ஒஎஸ் வனவிலங்குகளின் மீட்பு பணியில் இறங்கி உள்ளது.