
குன்னூர்: குன்னூர் மேட்டுப்பாளையம், இடையே இயக்கப்படும் மலை ரயில் பாதையில் பாறைகள் விழுந்ததால் மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக அவ்வப்போது மழை பெய்தது. இந்நிலையில் இன்று மேட்டுப்பாளையம் குன்னூர் இடையே ஹில் குரோவ் பகுதில் மலை ரயில் பாதையில் பாறைகள் விழுந்தன. இதனால் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு இயக்க வேண்டிய மலை ரயில் ரத்து செய்யப்பட்டது.