• May 9, 2025
  • NewsEditor
  • 0

‘மைனா’ படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் நடிகை அமலா பால். அந்தப் படத்தில் சிறப்பாக நடித்ததன் மூலம் விஜய், சூர்யா, தனுஷ், விக்ரம் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்தார்.

தொடர்ந்து பல்வேறு மொழிப் படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வந்தார்.  அவர் நடித்த ‘ஆடை’ திரைப்படம் அவருக்கு தமிழில் குறிப்பிடத்தக்க படமாக அமைந்தது.

அமலா பால்

அதன் பிறகு மலையாளத்தில் பிருத்விராஜுடன் ‘ஆடு ஜீவிதம்’ படத்தில் நடித்திருந்தார். 

கடந்த 2023 ஆம் ஆண்டு ஜகத் தேசாய் என்பவரை திருமணம் செய்துகொண்டார். தற்போது இருவருக்கும் ஒரு மகன் இருக்கிறார். இந்நிலையில் சமீபத்திய நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்துகொண்ட அமலா பால் தனது கணவர் ஜகத் தேசாய் பகிர்ந்திருக்கிறார்.

“முதன் முதலில் நானும் ஜகத்தும் கோவாவில் சந்தித்தோம். அவர் குஜராத்தி என்றாலும் கோவாவில்தான் வசித்து வந்தார். அவருக்கு தென்னிந்தியப் படங்களைப் பார்க்கும் பழக்கம் இல்லை.

அதனால் நான் ஒரு நடிகை என்பது அவருக்கு தெரியாது. நானும் அதனைக் காட்டிக்கொள்ளவில்லை. சில நாட்களுக்கு பிறகுதான் அவருக்கு தெரிய வந்தது.

அமலா பால்- ஜகத் தேசாய்
அமலா பால்- ஜகத் தேசாய்

நான் கர்ப்பக்காலத்தில் இருக்கும்போதுதான் என்னுடையப் படங்களை ஒவ்வொன்றாகப் பார்த்தார்.  அவருக்கு விருது நிகழ்ச்சிகளைப் பார்ப்பது மிகவும் பிடிக்கும்.

நான் விருது விழாவிற்கு சென்று விருது வாங்குவதையும், ரெட் கார்ப்பட்டில் நடப்பதையும் அவர் மிகவும் வியப்பாகப் பார்த்தார்” என்று தனது கணவர் ஜகத் தேசாய் குறித்து பகிர்ந்திருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *