
சென்னை: ஒவ்வொருவரையும் தொழில்முனைவோராக உருவாக்கும் பணியை ரெப்கோ நுண்கடன் நிறுவனம் செய்து வருவது பாராட்டுக்குரியது என, கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் வி.கீதாலஷ்மி கூறினார்.
ரெப்கோ நுண்கடன் நிறுவனத்தின் 15-வது ஆண்டு விழா சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஏ.ஜி.வெங்கடாச்சலம் வரவேற்புரை ஆற்றுகையில், “ரெப்கோ நுண்கடன் நிறுவனம் கடந்த 2010-ம் ஆண்டு நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் தனது முதல் கிளையை தொடங்கி, தற்போது 130 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. தென் மாநிலங்களில் 12 லட்சம் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.14 ஆயிரம் கோடி கடன் வழங்கியுள்ளது. மகளிர் மேம்பாட்டுக்காக இந்நிறுவனம் பணியாற்றி வருகிறது'' என்றார்.