இந்தியா – பாகிஸ்தான் இடையே மோதல் அதிகரித்துவரும் சூழலில் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், இத்தாலி உள்ளிட்ட வெளிநாடுகளுடன் தொடர்ந்து பேசி வருகிறார் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்.

ஜெய்சங்கர் உடனான உரையாடல் குறித்து அமெரிக்க அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “செயலாளர் மார்கோ ரூபியோ, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கருடன் உரையாற்றினார்.

மோதல் தீவிரமடைவதை உடனடியாக தடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

ரூபியோ

இந்தியா பாகிஸ்தான் இடையே நேரடி உரையாடலுக்கு அமெரிக்கா ஆதரவளிப்பதாகவும், நாடுகளுக்கிடையிலான தொடர்பை மேம்படுத்த ஊக்குவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் மரணமடைந்தவர்களுக்காக மீண்டும் இரங்கல் தெரிவித்தார். தீவிரவாததுக்கு எதிரான சண்டையில் இந்தியாவுடன் அமெரிக்கா நிற்பதை உறுதிப்படுத்தினார்.” எனக் கூறப்பட்டுள்ளது.

Jaishankar எக்ஸ் தள பதிவில், அமெரிக்கா தீவிரவாததுக்கு எதிரான சண்டையில் துணை நிற்பதைப் பாராட்டினார். மேலும், எல்லைதாண்டிய தீவிரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் பதிலடிகள் துல்லியமானவை மற்றும் அளந்து மேற்கொள்ளப்பட்டவை என்பதை அமெரிக்காவுக்குச் சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மோதலை தீவிரப்படுத்தும் எந்தவொரு நடவடிக்கையையும் இந்தியா எதிர்க்கிறது என்றும் தெரிவுபடுத்தியுள்ளார்.

இதேப்போல இத்தாலி துணை பிரதமர் அண்டோனியோ டஜானியுடனும் உரையாற்றியுள்ளார் ஜெய்சங்கர்.

மேலும் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு மற்றும்பாதுகாப்பு கொள்கைகளுக்கான உயர் பிரதிநிதியும் ஐரோப்பிய ஆணையத்தின் துணை தலைவருமான கஜா கல்லஸ் உடனும் பேசியுள்ளார்.

நேற்றைய தினம் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்துள்ளார் ஜெய்சங்கர். சவுதி அரேபியாவின் வெளியுறவுத்துறை இணையமைச்சரை சந்தித்துப் பேசியுள்ளார்.

கடந்த மே 7ம் தேதி, ஜெர்மனி, பிரான்ஸ், கத்தார், ஜப்பன், ஸ்பெயின் நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் பேசியுள்ளார்.

முன்னதாக ஸ்லோவேனியா, லாத்வியா ரஷ்யா நாடுகளைச் சேர்ந்த பிரநிதிகளுடம் உரையாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடி இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளின் பிரதிநிதிகளுடன் பாகிஸ்தான் பிரச்னைப் பற்றி உரையாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *