இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துவரும் சூழலில் நேபாளம் நாட்டின் வெளியுறவுத் துறை பத்திரிகை செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.

பத்திரிகை செய்தியில்,

“ஏப்ரல் 22, 2025 தேதியில் ஒரு நேபாளி உட்பட அப்பாவி சுற்றுலா பயணிகள் உயிரைப் பறித்த தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் இடையே அதிகரிக்கும் மோதல் குறித்து நேபாளம் மிகுந்த கவலைகொள்கிறது.

தீவிரவாத தாக்குதல் நடந்த துயரமான நேரத்தில் இந்தியாவும் நேபாளம் ஒன்றுபட்டு நின்று துயரத்தைப் பகிர்ந்துகொண்டன.

இந்தியா-நேபாளம்

நேபாளம் உடனடியாகவும், சந்தேகத்திற்கு இடமின்றியும் காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்தது, இதன் மூலம் அனைத்து வகையான பயங்கரவாதத்துக்கும் எதிராக நிற்கும் எங்கள் உறுதிப்பாட்டை நினைவுகூரலாம். தீவிரவாதத்துக்கு எதிரான சண்டையில் நேபாளம் முழுமையாக உடன் நிற்கிறது.

எங்கள் கொள்கை நிலைப்பாட்டின் படி, எங்கள் அண்டைநாட்டுக்கு எதிராக எந்த ஒரு விரோத சக்தியும் எங்கள் மண்ணைப் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம்.

பதற்றத்தைத் தணித்து பிராந்தியத்தில் அமைதியையும் நிலைத்தன்மையையும் உருவாக்குவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.” எனக் கூறப்பட்டுள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *