
கத்தோலிக்க கிறிஸ்துவ மத தலைவரான போப் பிரான்சிஸ் ஏப்ரல் 21 ஆம் தேதி தனது 88 ஆவது வயதில் மறைந்தார். இவர் கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக் கொண்ட நிலையில் உயிரிழந்தார்.
அவரது உடல் புனித மேரி பசிலிக்காவில் நல்லடக்கம் செய்யப்பட்டது. 9 நாள்கள் வாடிகனில் துக்கம் அனுசரிக்கப்பட்டது. இதனையடுத்து புதிய போப் பிரான்சிஸை தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் தொடங்கின.
அதன்படி நேற்று வாடிகனில் உள்ள சிஸ்டைன் சேப்பல் தேவாலயத்தில் ரகசிய வாக்கெடுப்பு நடந்தது. இதற்காக 250 கார்டினல்கள் பங்கேற்றனர்.
முதல் நாள் நடைபெற்ற வாக்கெடுப்பில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
கார்டினல்கள் எழுதி வைத்திருக்கும், காகிதங்கள் அனைத்தும் எரிக்கப்பட்டு ஆலய சிம்னி வழியாக கரும்புகை வெளியேற்றப்படும். இதன் மூலம் போப் தேர்வு செய்யப்படவில்லை என்பதை தெரிவிப்பார்கள்.
புதிய போப் தேர்வு செய்யப்பட்டால் தேவாலய சிம்னி வழியாக வெள்ளைநிற புகை வெளியேறும். அதாவது, இதன் மூலம் புதிய போப் தேர்வு செய்யப்பட்டதாக வெளியுலகுக்கு தெரிவிக்கப்படும்.
இந்த நிலையில், வாடிகனில் புதிய போப் ஆண்டவரை தேர்வு செய்யப்பட்டது சற்றுமுன் உறுதியாகியுள்ளது. வெள்ளை நிற புகை வெளியேறியதை அடுத்து புதிய போப் தேர்வு செய்யப்பட்டதாக அறிவித்துள்ளனர்.