ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ம் தேதி சுற்றுலாப் பயணிகள் மீது நடந்த தீவிரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததற்குப் பதிலடியாக, இந்திய ராணுவம் நேற்று (மே 7) பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியிலுள்ள தீவிரவாதிகள் முகாம்கள் மீது `ஆபரேஷன் சிந்தூர் (Operation Sindoor)’ என்ற பெயரில் தாக்குதல் நடத்தியது.

Operation Sindoor – ஆபரேஷன் சிந்தூர்

இந்தப் பதில் தாக்குதலால், நேற்றிரவு இந்தியாவின் 15 நகரங்களைக் குறிவைத்து பாகிஸ்தானிலிருந்து ட்ரோன்கள், ஏவுகணைகள் வந்ததாகவும், இந்திய ராணுவத்தின் வான் பாதுகாப்பு அமைப்பு முறியடித்ததாகவும் மத்திய அரசு இன்று தெரிவித்தது.

இத்தகைய பதட்டமான சூழலில், இன்றிரவு 9 மணியளவில் ஜம்மு காஷ்மீர் மீது பாகிஸ்தான் நடத்திய வான்வெளி தாக்குதலை இந்தியா முறியடித்திருக்கிறது. பாகிஸ்தானின் இத் தாக்குதல் தொடர்பான விடியோவை ஜம்மு காஷ்மீர் உள்ளூர்வாசிகள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்தத் திடீர் தாக்குதலால் ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட எல்லோரையோர பகுதிகளில் பதட்டம் அதிகரித்திருக்கிறது. குறிப்பாக, ஜம்மு காஷ்மீரில் அவசரகால சைரன் ஒலிக்கச் செய்து பொதுமக்களுக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. கூடவே மின்சாரமும் துண்டிக்கப்பட்டிருக்கிறது. பாதுகாப்பாக இருக்குமாறு மக்கள் அறிவுறுத்தப்பட்டது வருகின்றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *