
புதுடெல்லி: “பதற்றத்தை மேலும் அதிகரிப்பது இந்தியாவின் நோக்கம் கிடையாது. ஆனால். பாகிஸ்தான் ராணுவத் தாக்குதல் நடத்தினால், அதற்கு சரியான பதிலடி வழங்கப்படும்” என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். அந்தத் தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக, பாகிஸ்தான் மீது ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் வான்வழி தாக்குதலை மேற்கொண்டது இந்திய ராணுவம். இந்நிலையில், இந்தியாவுக்கு பல நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன.