
சென்னை: மாமல்லபுரம் சித்திரை முழு நிலவு மாநாட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் கண்டிப்புடன் பின்பற்றப்படும் என்று வடக்கு மண்டல ஐஜி- யிடம் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என பாமகவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாமல்லபுரத்தை அடுத்த வடநெமிலியில் மே 11-ம் தேதி பாமக சார்பில் நடத்தப்படும் சித்திரை முழு நிலவு மாநாட்டுக்கு தடை விதிக்க கோரி ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த முத்துக்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், சித்ரா பவுர்ணமி நாளில் பாமக மாநாடு நடத்துவதால் பக்தர்கள் பாதிக்கப்படுவார்கள்.