
புதுடெல்லி: இந்தியாவின் 15 ராணுவ இலக்குகளை குறிவைத்து ட்ரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் மேற்கொண்ட முயற்சிகளை இந்திய ராணுவம் முறியடித்துள்ளது. மேலும், இந்திய ராணுவம் நடத்திய பதில் தாக்குதலில் லாகூரில் உள்ள வான் பாதுகாப்பு அமைப்பு அழிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்று காலை, இந்திய ஆயுதப்படைகள் பாகிஸ்தானின் பல இடங்களில் வான் பாதுகாப்பு ரேடார்களையும், அமைப்புகளையும் குறிவைத்தன. லாகூரில் உள்ள ஒரு வான் பாதுகாப்பு அமைப்பு செயலிழக்கச் செய்யப்பட்டதாக நம்பத்தகுந்த முறையில் அறியப்படுகிறது.