வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்

வணக்கமுங்க கோயம்புதூர்ல இருந்து

இத்தன வருஷமா கோயம்புத்தூர்ல இருந்துட்டு இந்தா இருக்க ஊட்டிய போய் பாத்ததில்லையான்னு யாரும் காரி துப்புறதுக்கு முன்னாடி ஊட்டி மண்ணுல சாரி ஊட்டி மலையில கால வச்சிடனும் அப்படின்றது பெரிய கனவாவே இருந்துச்சு.

அந்த கனவு நிறைவேற ஒரு காலமும் வந்துச்சு. அதுல டுவிஸ்ட் என்னன்னா? இந்த ட்ரிப் ஃபேமிலி ட்ரிப்பா இல்லாம ஃபிரண்ட்ஸ் வித் ஃபேமிலி ட்ரிப்பா அமஞ்சது தான்.

எனக்கு மூணு பிரெண்ட்ஸ் இருக்காங்க. இன்னைக்கு நேத்து ஃபிரண்ட்ஸ் இல்லங்க. ங்கே ங்கே ன்னு அழுதுகிட்டு பால்வாடி போன காலத்துல இருந்து ஃபிரண்ட்ஸ் நாங்க. கிட்டதட்ட 25 வருஷ ஃப்ரெண்ட்ஷிப்.

அதுல ஒரு ஃப்ரெண்ட் திருச்சில இருக்காங்க. நாங்க ரெண்டு பேர் கோயம்புதூர்ல இருக்கோம்.

திருச்சில இருக்க ஃப்ரெண்ட்டோடா சொந்தகாரங்க ஒருத்தங்களுக்கு கோயம்புத்தூர்ல மேரேஜ் . சோ கல்யாணத்துக்கு வர்ற சாக்குல கழுத அப்படியே ஊட்டிய போய் பாத்துடனுண்ணு முழு மூச்சா இறங்கி மூணு பேரும் வேல பாக்க ஆரம்பிச்சுட்டோம்.

அதுக்காக எங்க வீட்டுக்காரங்க மண்டைய கழுவி, ட்ரிப் போறதுக்குள்ள நாங்க பெத்த புள்ளைங்களுக்கு சளி காய்ச்சல்ன்னு எதுவும் வந்துட கூடாதுன்னு வேண்டாத தெய்வத்த எல்லாம் வேண்டி, இங்க போலாமா அங்க போலாமான்னு பிளான் பன்றத விட்டுட்டு, போவோமா இல்லையானு ஒரு பயத்தோடயே ஒவ்வொரு நாளையும் கடத்த, கடசியா அந்த நாளும் வந்துச்சு.

Ooty

திருச்சில இருக்க பிரெண்ட் காலைல 5 மணிக்கே செம்மொழி எக்ஸபிரஸ்ல வந்து கோயம்புதூர் ஜாங்க்சன்ல இறங்கிட்டாங்க.

நாங்க எங்க வீட்டுல இருந்து கிளம்பி மேட்டுபாளையம்ல உள்ள இன்னொரு பிரெண்ட் வீட்ல எல்லாரும் கேதர் ஆகி 8 மணிக்கு வீட்ட விட்டு ஊட்டிய நோக்கி கிளம்பனும் இதன் பிளான்.

ஆனா அங்க போய் அவங்கள எல்லாம் ரொம்ப நாள் அப்புறம் பாத்த சந்தோஷத்துல ஊட்டிய மறந்து நாங்க லூட்டி அடிக்க ஆரம்பிசிட்டோம். அப்புறம் அப்புடி இப்புடின்னு கிளம்ப 10 மணி ஆகிடுச்சு.

ஒரு கார் ரெண்டு வண்டில போனோம். கார்ல ஒரு கப்புல் நாங்க பெத்த புள்ளைங்க எல்லாரும் ஏறிக்கிட்டாங்க. மத்த ரெண்டு கப்புள்ஸ்ம் ரெண்டு வண்டில போனோம்.

சும்மா சொல்ல கூடாது ஒவ்வொரு ஹேர்ப்பின் பெண்ட் ஏறும் போதும் பயங்கர திரில் அண்ட் அடிவென்சரா இருந்துச்சு. அப்புறம் குன்னூர்ல ஸ்டாப் பண்ணி டீ குடிச்சோம். டீ கொஞ்சம் சுமாரா தான் இருந்துச்சு. ஆனா சீனரி சூப்பரா இருந்துச்சு.

சிம்ஸ் பார்க், கர்நாடகா கார்டன் ,போட் ஹவுஸ் இது தான் எங்க பிளான். ஏனா அடுத்த நாள் அந்த ஃப்ரெண்ட்க்கு மேரேஜ் பங்க்சன் இருந்ததால ஒன் டே ஓட ட்ரிப் முடிக்க பிளான் பண்ணி இருந்தோம்.

பர்ஸ்ட் சிம்ஸ் பார்க் போனோம். எங்கள கல்யாணம் பண்ணிக்கிட்ட தெய்வங்கள் எல்லாம் நாங்க பெத்த புள்ளைங்கள பாத்துக்க நாங்க மூணு பேரும் எங்களுக்கு புள்ளைங்க இருக்கதையே மறந்து அந்த பார்க்ல சுத்திட்டு இருந்தோம் அப்புறம் அங்க இருந்து வெளிய வந்து புல்லா சாப்பிட்டு போட் ஹவுஸ் போனா அங்க சரியான கூட்டம். சோ அந்த பிளான ஸ்கிப் பண்ணிட்டு அங்க இருந்து கர்நாடகா கார்டன் போனோம்.

ஓர்த் பிளேஸ்ங்க்க. எங்க புள்ளைங்க எல்லாம் அவங்களுக்குள்ள ஃபிரண்ட்ஸ் ஆகிட்டு அவங்க தனியா விளையாட போய்ட்டாங்க. ஆபோ தான் நானும் என் ஃப்ரெண்டும் ஒரு சம்பவம் பணணோம். கர்நாடக கார்டன் ரொம்ப ஸ்லோப்பா இருக்கும்.

அதோட உச்சிக்கு ஏறி அங்க இருந்து தரையில படுத்து நாங்க ரெண்டு பேரும் உருண்டுகிட்டே கீழ வந்தோம். உண்மையா வேற லெவல் ஃபீலிங்க். அப்புறம் இருட்ட ஆரம்பிச்சுடுச்சு இதோட ட்ரிப்ப முடிச்சுக்கலாம்ன்னு சொல்லி அங்க இருந்து கிளம்பினோம் .

எல்லாரும் ஊட்டிக்கு கோத்தகிரி வழியா ஏறி குன்னூர் வழியா இறங்குவாங்க . நாங்க குன்னூர் வழியா ஏறி கோத்தகிரி வழியா இறங்கினோம்.

நைட் 11 மணிக்கு மேட்டுபாளையம் ரீச் ஆகிட்டோம். அந்த ஃப்ரெண்ட் வீட்டுலயே டின்னர் முடிச்சுட்டு அவங்க அவங்க வீட்டுக்கு கிளம்பிட்டோம்.

இப்போ இதை எழுதும் போது ஃபிஃப்த் படிக்கும் போது ஸ்கூல்ல கொடைக்கானால் டூர் கூட்டி போய்ட்டு வந்துட்டு அதை பத்தி அடுத்த நாள் கட்டுரை எழுதி கொண்டு வர சொன்னாங்க அது தான் ஞாபகம் வருது.

இது ஒரு சின்ன ட்ரிப் தான் ஆனா அது எங்களுக்குள்ள இருந்த குழந்தை தனத்தை மீட்டு கொண்டு வந்துச்சு. நாங்க எங்களுக்கு குழந்தைகள் இருக்காங்கரதையே மறந்து அந்த நாள் புல்லா என்ஜாய் பண்நோம். இதுக்கு எங்களோட பார்ட்னர்ஸ்க்கு பெரிய நன்றி சொல்லணும். அவங்க எல்லாரும் மனசு வைக்கலான இது சாத்தியமே இல்ல.

சோ ஊட்டி போற கனவு நிறைவேறிடுச்சு. இதுல இருக்க டேக் ஹோம் மெசேஜ் என்னன்னா நம்ம எங்க போறோம்ன்றது முக்கியமில்ல யார் கூட போறோம் அப்படின்றது தான் முக்கியம்.

சோ லேடீஸ் பக்கமாவோ தூரமாவோ உங்க ஃபிரண்ட்ஸ் கூட வருஷத்துக்கு ஒரு தடவையாவது ஒரு ட்ரிப் போய்ட்டு வாங்க . அது அடுத்த வருஷம் வரைக்கும் உங்கள புத்துணர்ச்சியா வச்சுக்கும்.வீட்டுல எல்லார பத்தியும் யோசிக்குற நீங்க உங்கள பத்தியும் கொஞ்சம் யோசிங்க . உங்கள எது சந்தோஷமா வச்சுக்குமோ அதை செய்ய தயங்காதீங்க. செல்ஃப் லவ் இஸ் நாட் செல்பிஷ்.

சரண்யா கோயம்புத்தூர்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *