
சென்னை: பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை இன்று (மே 8) காலை 9 மணிக்கு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டார். இதில் பாடவாரியாக 100-க்கு 100 முழு மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை விவரம் வெளியாகியுள்ளது. கணினி அறிவியலில் அதிகமானோரும், விலங்கியலில் குறைவானோரும் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர்.
தமிழ்: 135
இயற்பியல்: 1,125
வேதியியல்: 3,181
உயிரியல்: 827
கணிதம்: 3.022
தாவரவியல்: 269
விலங்கியல்: 36
கணினி அறிவியல்: 9,536
வணிகவியல் 1,624
கணக்குப் பதிவியல்: 1,240
பொருளியல்: 556
கணினிப் பயன்பாடு: 4,208
வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல்: 273