
பாகிஸ்தான் மற்றும் பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய விமானப்படை நேற்று ஸ்கால்ப், ஹேமர் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது.
பாகிஸ்தானில் உள்ள 9 தீவிரவாத முகாம்கள் மீது நேற்று 24 தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்த தாக்குதலில் ஸ்கால்ப் மற்றும் ஹேமர் வகை ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டன. இதில் ஸ்கால்ப் ஏவுகணை 1,300 கிலோ எடை கொண்டது. ரபேல் போன்ற அதிநவீன போர் விமானங்களில் இந்த ஏவுகணையை பொருத்த முடியும். இந்த ஏவுகணை தொலை தூர இலக்குகளை துல்லியமாக தாக்கும். இந்த ஏவுகணையை எம்பிடிஏ என்ற ஐரோப்பிய நிறுவனம் தயாரிக்கிறது.