
தனது ‘ரெட்ரோ’ படத்தின் மூலம் கிடைத்த லாபத்தில் இருந்து ரூ.10 கோடியை அகரம் அறக்கட்டளைக்காக வழங்கியுள்ளார் நடிகர் சூர்யா.
இது தொடர்பாக சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில், “பகிர்தலே மிகச் சிறந்த மகிழ்ச்சி. நடிகனாக எனக்கு அடையாளம் கொடுத்து, என் முயற்சிகளை அங்கீகரித்து உயர்த்திய இந்த சமூகத்திடம், வெற்றியைப் பகிர்ந்து கொள்வது எப்போதும் மனநிறைவை தருகிறது.