பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மாா்ச் 3-ஆம் தேதி தொடங்கி 25-ஆம் தேதி முடிவடைந்தது. தமிழக பள்ளிக்கல்வித்துறை பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்கான இந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகிறது.

மாணவர்கள் dge.tn.gov.in மற்றும் tnresults.nic.in ஆகிய இணையதளங்களில் தங்களின் தேர்வு முடிவுகளை பார்த்துக் கொள்ளலாம். EMIS இணையதளத்தில் பதிவு செய்த தொலைபேசி எண்ணுக்கும் மாணவர்களின் தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும் என பள்ளிக்கல்வி துறை அறிவித்திருக்கிறது.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்

இந்த பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், “மாண்புமிகு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி இன்றைய தினம் +2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிடுகிறோம்.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் கூற்றுப்படி ‘இது மாணவர்களுக்கான மதிப்பீடு கிடையாது. தேர்வுக்கான மதிப்பீடு மட்டுமே’ என்பதை மாணவச் செல்வங்களுக்கு அன்போடு தெரிவிக்கிறேன்.

மதிப்பெண்களை அளவாக கொள்ளாமல், தங்களின் திறமைகள் சார்ந்த துறைகளில் மாணவச் செல்வங்கள் முன்னேறிக் கொண்டே இருப்பார்கள் எனும் நம்பிக்கை எங்கள் அனைவருக்கும் உண்டு. மாணவர்களே… உங்கள் ஒவ்வொருவருக்கும் இவ்வுலகில் ஆளுமைமிக்க நாற்காலி காத்துக்கொண்டிக்கிறது. வாழ்த்துகள்.” என்று தெரிவித்திருக்கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *