
இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து நேற்று முன்தினம் (அமெரிக்க நேரப்படி), அமெரிக்க அதிபர் ட்ரம்பிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், “இது ஒரு அவமானம்” என்று பதிலளித்திருந்தார்.
மீண்டும், நேற்று ட்ரம்பிடம் இந்தியா – பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள பதற்ற நிலை குறித்து கேட்கப்பட்டது.
“இது மிகவும் மோசமானது. நான் இரு நாடுகளுடனும் நல்ல உறவில் இருக்கிறேன். எனக்கு இரு நாடுகளையும் நன்கு தெரியும். அவர்கள் இதைச் சரிசெய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்.
இருவருமே இதை நிறுத்த வேண்டும்.பழிக்குப் பழி நடந்துவிட்டது. இப்போது அவர்களால் இதை நிறுத்திக்கொள்ள முடியும் என்று நினைக்கிறேன்.
இரு நாடுகளுடனும் இணைந்து நாம் நன்கு செயல்பட்டு வருகிறோம். என்னால் எதாவது முடிந்தால், நிச்சயம் அதை நான் செய்வேன்” என்று பேசியுள்ளார் ட்ரம்ப்.
கடந்த மாதம் 22-ம் தேதி நடந்த பஹல்காம் தாக்குதலுக்கு தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்திருந்தார் ட்ரம்ப். மேலும், ‘இந்தியாவுடன் இருக்கிறோம்’ என்று ஆதரவு தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு, ‘இது ஒரு அவமானம். சீக்கிரம் இது முடியும் என்று நம்புகிறேன்’ என்று நேற்று முன்தினம் கூறியிருந்தார்.