
புதுடெல்லி: பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா நடத்திய ‘சிந்தூர்’ தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உட்பட பல்வேறு நாட்டு தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.அதன் விவரம் வருமாறு:
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்: தீவிரவாதம் ஒரு அவமானம். கடந்த காலங்களை பார்க்கும் போது ஏதோ ஒன்று பெரிதாக நடக்கப் போகிறது என்பது மக்களுக்கு தெரியும். இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் நீண்ட காலமாக மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இந்த மோதல் பல தசாப்தங்களாக நீடித்து வருகிறது. இது விரைவில் முடிவுக்கு வரும் என நம்புகிறேன்.