
ராமேசுவரம்: நாடு முழுவதும் போர்க்கால பாதுகாப்பு ஒத்திகைகள் நடைபெற்ற நிலையில், ராமேசுவரம் கடற்பகுதியில் கடற்படை மற்றும் கடலோர காவல்படையினர் ரோந்து பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். சந்தேக நபர்களைக் கண்டால் தகவல் தெரிவிக்க மீனவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் கடந்த மாதம் நடைபெற்ற தாக்குதலில் இந்தியர்கள் 26 பேர் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக புதன்கிழமை அதிகாலை இந்திய பாதுகாப்புப் படைகள் ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கையைத் தொடங்கி, பாகிஸ்தானிலும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு – காஷ்மீர் பகுதியிலும் உள்ள பயங்கரவாத கட்டமைப்புகளைத் தாக்கின. மொத்தத்தில் 9 பயங்கரவாத முகாம்கள் குறிவைத்துத் தாக்கப்பட்டன