
சென்னை: மத்திய அரசின் அறிவிப்பின்படி தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டத்துக்கான தினசரி ஊதியம் ரூ.319-ஐ ஏப்ரல் 1 முதல் ரூ.336 ஆக உயர்த்தி வழங்க ஊரக வளர்ச்சித் துறை செயலர் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசின் ஊரக வளர்ச்சித் துறை செயலர் ககன்தீப்சிங் பேடி வெளியிட்டுள்ள அரசாணை விவரம்: மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தில் (100 நாள் வேலை திட்டம்) பயனாளிகளுக்கு வழங்கப்படும் தினசரி ஊதியத்தை 1.4.2025 முதல் ரூ.319-லிருந்து ரூ.336 ஆக உயர்த்தி வழங்கும் வகையில் மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது.