
சென்னை: தமிழக அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.20 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டு, அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம், ஆண்டுதோறும் சுமார் 8 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பயன்பெறுவர் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசின் நிதித்துறை செயலர் த.உதயச்சந்திரன் வெளியிட்டுள்ள அரசாணையின் விவரம்: அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் குடும்பத்தினருடன் பண்டிகைகளை சிறப்பாக கொண்டாடும் வகையில் ஏற்கெனவே வழங்கப்பட்டு வரும் ரூ.10 ஆயிரம் பண்டிகைக்கால முன்பணம் ரூ.20 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். இதனால், ஆண்டுதோறும் சுமார் 8 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பயன்பெறுவர் என சட்டப்பேரவையில் விதி எண் 110-ன்கீழ் முதல்வர் அறிவிப்பு வெளியிட்டார்.