
சென்னை: தமிழக அரசின் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் கடந்த 4 ஆண்டுகளில் 2.37 கோடி சுய உதவிக் குழு மகளிருக்கு ரூ.1.12 லட்சம் கோடி கடனுதவி வழங்கி சாதனை படைத்துள்ளது.
மகளிரின் சமூக பொருளாதார மேம்பாட்டை உள்ளடக்கிய செயல்பாட்டை முதன்மை நோக்கமாக கொண்டு அனைத்து வறுமை ஒழிப்பு திட்டங்களையும் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இதையொட்டி தொடங்கப்பட்ட தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சுய உதவிக் குழுக்களின் பொருளாதார தேவையைக் கருத்தில் கொண்டு வங்கிக் கடன் இணைப்பு வழங்குவது உள்பட பல்வேறு சாதனைகளை தொடர்ச்சியாக படைத்து வருகிறது.