
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலை இந்திய ராணுவம் நடத்தியிருக்கிறது.
இந்த ஆபரேஷனில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள 9 தீவிரவாத இடங்களை இந்திய இராணுவம் குறி வைத்துத் தாக்கியிருக்கிறது.
இந்திய இராணுவத்தின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை வரவேற்று அரசியல் தலைவர்கள் பதிவிட்டு வருகின்றனர். அந்தவகையில் கிரிக்கெட் பிரபலங்களும், ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து பதிவுகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து பதிவிட்ட சச்சின் டெண்டுல்கர், “ஒற்றுமையில் அச்சமற்றவர்கள். வலிமையில் எல்லையற்றவர்கள். இந்தியாவின் கேடயம் அதன் மக்கள்தான். இந்த உலகத்தில் தீவிரவாதிகளுக்கு இடமில்லை. நாங்கள் எல்லோரும் ஒரே அணி” என்று பதிவிட்டிருக்கிறார்.
Fearless in unity. Boundless in strength. India’s shield is her people. There’s no room for terrorism in this world. We’re ONE TEAM!
Jai Hind #OperationSindoor
— Sachin Tendulkar (@sachin_rt) May 7, 2025
தொடர்ந்து ஹர்பஜன் சிங் வெளியிட்ட பதிவில், “ ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்பது பஹல்காமில் எங்கள் அப்பாவி மக்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டதற்கு இந்தியா கொடுத்த பதிலடி” என்று பதிவிட்டிருக்கிறார்.
‘தீவிரவாதத்திற்கு எதிராக இந்தியா தனது உறுதியான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது’ தவான் பதிவிட்டிருக்கிறார்.
India takes a stand against terrorism. भारत माता की जय!
— Shikhar Dhawan (@SDhawan25) May 7, 2025
தவிர கம்பீர், சேவாக் உள்ளிட்ட சிலரும் ‘ஆபரேஷன் சிந்தூருக்கு’ ஆதரவாகப் பதிவிட்டிருக்கின்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs