
காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்தியா, பாகிஸ்தானியர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. பாகிஸ்தானும் இந்தியாவுக்கு எதிராக சில உத்தரவுகளை பிறப்பித்தது.
இதனை அடுத்து இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் பாகிஸ்தான் மீது இந்தியா இன்று நள்ளிரவு 1.44 மணிக்கு அதிரடி தாக்குதலை நடத்தியுள்ளது.
மொத்தம் ஒன்பது இடங்களில் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு ”ஆபரேஷன் சிந்தூர்” என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்தியா நடத்திய ”ஆப்ரேஷன் சிந்தூர்” தொடர்பான தகவல்கள் சமூக ஊடகங்களை ஆட்கொண்டன, இதனையடுத்து, பாகிஸ்தான் மக்கள் அதற்கான பதில்களையும் கேள்விகளையும் கூகுளில் தேடி உள்ளனர்.
பாகிஸ்தானின் அதிகம் தேடப்பட்ட கேள்விகளில் ஒன்று “சிந்துர் என்றால் என்ன”?
“ஆங்கிலத்தில் சிந்தூர் என்றால் என்ன?”
“ஆப்ரேஷன் சிந்துர் விக்கி” என கூகுளில் தேடி உள்ளனர்.
இஸ்லாமாபாத், பஞ்சாப் ஆகிய பகுதிகளில் இருந்தும் தாக்குதல் குறித்து கூகுளில் தேடப்பட்டிருக்கிறது.
அதில் “இந்தியா ஏவுகணையை ஏவுகிறது”, “இந்தியா ஏவுகணை தாக்குதல்” “இந்தியா பாகிஸ்தானை நோக்கி ஏவுகணை ஏவியது” போன்ற தேடுதல் வார்த்தைகள் இடம் பெற்றிருந்தன.
அதுமட்டுமில்லாமல் பாகிஸ்தானின் பல பகுதிகளில் இருந்து ”வெள்ளைக்கொடி” என்ற வார்த்தையும் இடம்பெற்றுள்ளன.
வெள்ளைக் கொடி என்பது போரில் வீரர்கள் தங்கள் துப்பாக்கியில் வெள்ளை துணி அல்லது கைகுட்டையை காட்டி, தங்களின் எதிரி அல்லது பிற ராணுவத்திற்கும் போர் நிறுத்த கோரிக்கைக்கான ஒரு குறியீடாகும். அதாவது அமைதி மற்றும் பேச்சுவார்த்தைக்கு முயற்சிக்க அழைப்பதாகும்.
அதுமட்டுமில்லாமல் பாகிஸ்தானில் கூகுளில் அதிகம் பயன்படுத்தப்படும் முக்கிய வார்த்தையாக ”இந்தியா போரை அறிவிக்கிறது” என இடம்பெற்றிருக்கிறது. இரு நாடுகளுக்கு இடையான பதட்டங்கள் முழு அளவிலான போரை அதிகரிக்கும் என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.