
‘இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூருக்கு’ பதிலடி கொடுக்கப்படும்’ என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இன்று காலை அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இதை தொடர்ந்து பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிப் இப்போது அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, “கடந்த இரண்டு வாரங்களாகவே, இந்தியாவிற்கு எதிராக நாங்களாக எந்தத் தாக்குதலையும் தொடங்கமாட்டோம் என்று கூறி வருகிறோம்.
ஆனால், எங்கள் மீது தாக்குதல் நடந்தால், நாங்கள் அதற்கு பதிலடி கொடுப்போம். இந்தியா பின்வாங்கினால், நாங்களும் இந்தப் பதற்றத்தை முடிவுக்கு கொண்டுவருவோம்” என்று பேசியுள்ளார்.
கடந்த ஏப்ரல் 22-ம் தேதி, காஷ்மீர் பஹல்காமில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் பஹல்காமுக்கு சுற்றுலா வந்த 25 பேரும், அவர்களை காப்பாற்ற சென்ற ஒரு உள்ளூர்வாசியும் உயிரிழந்தனர்.
இந்தத் தாக்குதல் மற்றும் உயிரிழப்புகள் இந்தியாவில் பெரும் அதிர்ச்சியை கிளப்பியது. அதற்கு பதிலடியாகத் தான் ‘ஆபரேஷன் சிந்தூர்’ -ஐ கையிலெடுத்துள்ளது இந்திய அரசு.
ஆசிப்பின் இந்தப் பதில், பாகிஸ்தான் தாக்குதலை முன்னெடுக்குமா… அல்லது பின்வாங்குமா? என்கிற எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.