பஹல்காம் தாக்குதலுக்கு எதிர்வினையாற்றும் வகையில் இந்திய அரசு பாகிஸ்தான் ஆக்கிரமிப்புப் பகுதியிலும், பாகிஸ்தானிலும் ஆப்ரேஷன் சிந்தூர் எனும் பெயரில் தாக்குதலை நடத்தியிருக்கிறது. இந்தத் தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டதாகவும், 35 பேர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில், பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து ஊடகங்களிடம் பேசியிருக்கின்றனர்.
அதில் பஹல்காமில் கொல்லப்பட்ட சந்தோஷ் ஜக்தாலேவின் மனைவி, பிரகதி ஜக்தாலே, “அந்தத் தீவிரவாதிகள் எங்கள் மகள்களின் சிந்தூரத்தை அழித்தார்கள்…. அவர்களுக்கு இந்தத் தாக்குதல் பொருத்தமான பதில். இந்தத் தாக்குதலுக்கான பெயரைக் கேட்டதும், என் கண்களில் கண்ணீர் வந்தது. அரசுக்கு மனதார நன்றி கூறுகிறேன். மோடி இந்த பதிலின் மூலம் பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவருவார் என்று நான் நினைக்கிறேன்” என்றார்.
பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்ட மற்றொருவரான சுபம் திவேதியின் மனைவி அஷான்யா திவேதி, “என் கணவரின் மரணத்திற்கு பழிவாங்கியதற்காக அரசுக்கு நன்றி. இது ஆரம்பம். தீவிரவாதிகளை முற்றிலுமாக அழிக்கும் வரை மோடி நிறுத்த மாட்டார் என்பது எனக்குத் தெரியும். பயங்கரவாத இடங்கள் அனைத்தும் அழிக்கப்படும் என்ற நம்பிக்கையை அவர் எங்களுக்கு அளித்துள்ளார்.