
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக ‘ஆபரேஷன் சிந்தூர்’ – ஐ வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது இந்தியா.
“இந்தியாவின் இந்தப் போர் செயலுக்கு தக்க பதிலடியை பாகிஸ்தான் கொடுக்கும்” என்று பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
இதனால், இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உருவாகியுள்ளது.
இதனையடுத்து, தற்போது, இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, துணை குடியரசு தலைவர் ஜகதீப் தன்கர், பிரதமர் மோடி ஆகியோருக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த மூவரும் அடுத்து சில நாட்களுக்கு முக்கிய அலுவல் பணிகளில் மட்டுமே கலந்துகொள்வார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
இதனால், இந்த மாதத்தில் மோடி செல்லவிருந்த குரோஷியா, நார்வே, நெதர்லாந்து நாடு பயணங்கள் ஒத்தி வைக்கப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த முடிவு உளவுத்துறையின் தகவல் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
ஆபரேஷன் சிந்தூருக்கு முன்பே, மே மாதம் 9-ம் தேதி மோடி செல்லவிருந்த ரஷ்ய பயணம் ரத்து செய்யப்பட்டது.
போர் மற்றும் போர் பதற்ற நேரங்களில் குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவர், பிரதமர் ஆகியோருக்கு அச்சுறுத்தல் அதிகமாக இருக்கும். அதனால் தான், இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.