
‘ஹரி ஹர வீர மல்லு’ படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்துவிட்டது. ஆனால், எப்போது வெளியாகும் என்பது விரைவில் தெரியவரும்.
பவன் கல்யாண் நடிப்பில் நீண்ட வருடங்களாக தயாரிப்பில் இருக்கும் படம் ‘ஹரி ஹர வீர மல்லு’. தற்போது இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து விட்டதாக படக்குழு அறிவித்துள்ளது. பவன் கல்யாண் சம்பந்தப்பட்ட கடைசி 2 நாட்கள் படப்பிடிப்பை முடித்து, இதனை அறிவித்துள்ளது படக்குழு.