
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலை இந்திய ராணுவம் நடத்தியிருக்கிறது.
இந்த ஆபரேஷனில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள 9 தீவிரவாத இடங்களை இந்திய இராணுவம் குறி வைத்து தாக்கி இருக்கிறது.
இந்திய ராணுவத்தின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை வரவேற்று அரசியல் தலைவர்கள் பதிவிட்டு வருகின்றனர். அந்தவகையில் சினிமா பிரபலங்களும், ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து பதிவுகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
ரஜினிகாந்த் “ போராளியின் சண்டை தொடங்குகிறது. திட்டம் முடியும் வரை நிறுத்தம் இருக்காது. முழு நாடும் உங்களுடன் உள்ளது” என்று பிரதமர் மோடியை டேக் செய்து பதிவிட்டிருக்கிறார்.
The fighter's fight begins…
No stopping until the mission is accomplished!
The entire NATION is with you. @PMOIndia @HMOIndia#OperationSindoor
JAI HIND
— Rajinikanth (@rajinikanth) May 7, 2025
இந்நிலையில் பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார், ‘ஜெய் ஹிந்த்’, ‘ஜெய் சிவன்’ என்று பதிவிட்டிருக்கிறார்.
இதனைத்தொடர்ந்து கங்கனா ரனாவத், “ பஹல்காம் தாக்குதலில் மோடியிடம் சொல்லுங்கள் என்று தீவிரவாதிகள் சொன்னார்கள். மோடியின் பதில் இதுதான்(ஆபரேஷன் சிந்தூர்).

அதேபோல இயக்குநர் மதுர் பண்டார்கர் வெளியிட்டிருக்கும் பதிவில், “எங்கள் பிரார்த்தனைகள் எங்கள் ராணுவத்துடன் உள்ளன. ஒரு தேசமாக நாம் அனைவரும் ஒன்றுபட்டு நிற்கிறோம். ஜெய் ஹிந்த், வந்தே மாதரம்” என்று பதிவிட்டிருக்கிறார்.

நடிகை நிம்ரத் கவுர், “எங்கள் இராணுவத்துடன் ஒன்றுபட்டுள்ளோம். ஜெய் ஹிந்த், ஆபரேஷன் சிந்தூர்” என்று பதிவிட்டிருக்கிறார்.
மேலும் சிவகார்த்திகேயன், ” இதுதான் இந்திய இராணுவத்தின் முகம். ஜெய் ஹிந்த்” என்று இந்திய இராணுவத்திற்கு ஆதரவாகப் பதிவிட்டிருக்கிறார்.
#OperationSindoor
This is the face of the Indian Army
Jai Hind— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) May 7, 2025
தவிர சிரஞ்சீவி, ஏ.ஆர் ரஹ்மான், டாப்ஸி, காஜல் அகர்வால், அனுபம் கெர் உள்ளிட்ட பலர் ‘ஆபரேஷன் சிந்தூர்’-க்கு ஆதரவாகப் பதிவிட்டு வருகின்றனர்.