
பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு எதிர்வினையாக இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர் (Operation Sindoor)’-ஐ நடத்தியுள்ளது.
இதற்குத் தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் ஆதரவு தெரிவித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அவை…
தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி:
”பஹல்காம் தாக்குதலுக்கு எதிர்வினையாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள தீவிரவாத முகாம்களின் மீது ஆப்பரேஷன் சிந்தூர் மூலம் இந்திய ராணுவம் நடத்திய துல்லிய தாக்குதலுக்கு என்னுடைய பாராட்டுகள்.
மாண்புமிகு பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், நீதி வழங்கப்பட்டுள்ளது.
தீவிரவாதத்தை ஒழிப்பதற்கும், நமது குடிமக்களைப் பாதுகாப்பதற்குமான நமது நாட்டின் அர்ப்பணிப்பை இந்தத் தீர்க்கமான நடவடிக்கை காட்டுகிறது”
I commend the Indian Armed Forces
for their precise execution of #OperationSindoor, targeting terror camps in Pakistan and PoJK in response to the Pahalgam attack.Under the vigilant leadership of Hon'ble Prime Minister Thiru. @narendramodi Avl, justice has been delivered.… pic.twitter.com/8UsmnxlG3r
— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) May 7, 2025
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்
வெற்றிவேல்! வீரவேல்! #OperationSindoor
வெற்றிவேல்! வீரவேல்!#OperationSindoor pic.twitter.com/HDugdy1MAI
— Nainar Nagenthiran (@NainarBJP) May 7, 2025
பாஜக நிர்வாகி அண்ணாமலை
“தீவிரவாதிகளுக்கு புரியும் சிறந்த மொழியில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது!
ஜெய் ஹிந்த்!”
Terrorists answered in the language that they best understand!
Jai Hind! #OperationSindoor pic.twitter.com/TCXl43K9t4
— K.Annamalai (@annamalai_k) May 7, 2025
பாஜகவை சேர்ந்த தமிழிசை சௌந்தரராஜன்
என் தேசத்தை வணங்குகிறேன்…
என் தேசத்தை காக்க போராடும்… நம் தேச ராணுவ வீரர்களை.. வணங்குகிறேன்..— Dr Tamilisai Soundararajan (@DrTamilisai4BJP) May 7, 2025
நம்இந்தியர் சிந்திய ரத்தத்திற்கு
ஆப்பரேஷன் சிந்தூர் மூலம் நீதி கிடைத்திருக்கிறது..
தீவிரவாதத்தின்
மூலம் மற்றும் வேர் அழிக்கப்பட்டிருக்கிறது
தீவிரவாதத்தினால் சிதைந்த நம் இந்தியருக்கு நீதி கிடைக்க
பாகிஸ்தானின். தீவிரவாத. பதுகுழிகளை.. இந்தியா சிதைத்து இருக்கிறது.
War room.. அதாவது…— Dr Tamilisai Soundararajan (@DrTamilisai4BJP) May 7, 2025
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
நாட்டின் பாதுகாப்புக்காக மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளும் சரியானவையே: மத்திய அரசுக்கு அனைவரும் துணை நிற்போம்!
காஷ்மீரில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளின் கட்டமைப்புகளை அழிக்கும் வகையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வந்த 9 பயங்கர…
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) May 7, 2025