
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக இந்திய ராணுவம் பாகிஸ்தான் மீதும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது ஆபரேஷன் சிந்தூர் என்றப் பெயரில் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் தீவிரவாதக் குழுவின் தலைமை இடங்கள், பயிற்சி மையங்கள் குறி வைத்து தாக்கப்பட்டதாக தகவல் வெளியானது. மேலும், இந்தத் தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டதாகவும், 35 பேர் காயமடைந்ததாகவும் பாகிஸ்தான் தெரிவித்திருக்கிறது.
இந்த தாக்குதல் குறித்து ஜம்மு கஷ்மீரில் வாழும் மக்கள் இந்திய ராணுவத்தைப் பாராட்டி ‘இந்திய ராணுவம் ஜிந்தாபாத்’ ‘பாரத் மாதா கி ஜெய்’ போன்ற கோஷங்கள் எழுப்புவதாக வீடியோ வெளியாகியிருக்கிறது.
#WATCH | Jammu and Kashmir: Locals raise slogans of 'Indian Army Zindabad' and 'Bharat Mata ki Jai' as the Indian Armed Forces launched ‘Operation Sindoor’, hitting terrorist infrastructure in Pakistan and Pakistan-occupied Jammu and Kashmir from where terrorist attacks against… pic.twitter.com/cbhO6YrToB
— ANI (@ANI) May 7, 2025
தனியார் செய்தி நிறுவனத்திடம் பேசிய கஷ்மீரில் வாழும் ஒருவர் “நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம், பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுக்க வேண்டும் என நாங்கள் காத்திருந்தோம். இந்தத் தாக்குதல் ஆதாரத்துடன் நடந்துள்ளது. இந்த முறை யாரும் எந்த ஆதாரத்தையும் கேட்கப் போவதில்லை. நாங்கள் ராணுவத்துடன் நிற்கிறோம்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
உலகத் தலைவர்கள் இரு நாடுகளும் நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறு வலியுறுத்தியுள்ளனர், ஆனால் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுடன் இணைந்தும் உள்ளனர்.