
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ம் தேதி, சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இந்தத் தாக்குதலில் மொத்தம் 26 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இந்தத் தாக்குதலுக்கு எதிராகப் பலரும் குரல் கொடுத்திருந்தனர்.
இந்தப் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது.
இந்நிலையில்தான் ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலை இந்திய ராணுவம் நடத்தியிருக்கிறது.
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 இடங்களில் இந்த ராணுவத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்திய ராணுவம் நடத்திய இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்து பாகிஸ்தான் இன்னும் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீரில் தாக்குதலை நடத்தி இருக்கிறது. எல்லையில் பாகிஸ்தான் நடத்திய இந்தத் தாக்குதலில் இந்தியாவைச் சேர்ந்த 10 பேர் உயிரிழந்திருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.