
வெற்றிமாறனின் `விடுதலை’ படத்தில் கதை நாயகனாகச் சூரிக்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து, `கொட்டுக்காளி’, `கருடன்’ எனத் தொடர்ந்து ஹிட் கொடுத்தார் நடிகர் சூரி.
இதையடுத்து பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் சூரி நடித்த ‘மாமன்’ திரைப்படம் வரும் மே 9ம் தேதி திரையரங்குகளில் வெளியாகக் காத்திருக்கிறது.
இயக்குநர் பாண்டியராஜி உதவி இயக்குநராக இருந்தவர் பிரசாந்த் பாண்டிராஜ். தாய்மாமனின் கதையாக உருவாகியிருக்கும் இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி குடும்பங்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
இதன் வெளியீட்டையொட்டி இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றிருந்தது.
இவ்விழாவில் பேசிய மாரிசெல்வராஜ், “எனக்கும் சூரி அண்ணனுக்கும் எமோஷனலான ஒரு தொடர்பு இருக்கிறது. இருவரும் ஒரே வீட்டில் இருந்து வந்தது போல ஒரு உணர்வு. பல இரவுகள் அவருடன் நான் பயணித்து இருக்கிறேன். சூரியின் உடல் மொழி, அவர் கதை கேட்கும் திறமை இதையெல்லாம் பார்த்து அவர் ஒரு படத்தில் நடித்தால் எப்படி இருக்கும் என்று நான் பல முறை யோசித்து இருக்கிறேன்.
அப்படிப்பட்டவர்களுக்கு சினிமாவில் மார்க்கெட் இருக்காது
வாழ்க்கையில் எதார்த்தமாக பயணிக்கக் கூடிய, இப்படிப்பட்ட மனிதர்கள் எல்லாம் எப்போது கதாநாயகர்களாக ஆவார்கள் என்று நான் பலமுறை யோசித்து இருக்கிறேன். நான் கதை எழுதிய போது, சாதாரணமான ஒருவர் கிடைத்தால் நன்றாக இருக்குமே என்று யோசித்து இருக்கிறேன். ஆனால், அப்படிப்பட்டவர்களுக்கு சினிமாவில் மார்க்கெட் இருக்காது, நாம் ஒருவர் பெயரைச் சொல்லி இவர் கதாநாயகனாக நடித்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னால், அந்த கதை டம்மி ஆகிவிடும்.
அப்படி இருக்கக்கூடிய காலகட்டத்தில் அனைத்தையும் சாத்தியமாக்கி இன்று சூரி கதாநாயகனாக மாறி இருக்கிறார். இதை நினைக்கும்போதே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு எனர்ஜி வந்தது போல நான் உணர்கிறேன். யாருமே நடிக்க மாட்டேன் என்று சொன்ன ஒரு கதையை எடுத்துக்கொண்டு சூரியிடம் சென்றால் நிச்சயமாக அவர் நடித்துக் கொடுப்பார் என்கின்ற நம்பிக்கை பலருக்கு வந்திருக்கிறது. இன்னும் சூரி அடுத்தடுத்து பல திரைப்படங்களை நடிக்க வேண்டும். அவருக்கு என்னுடைய வாழ்த்துகள்.
இந்த திரைப்படத்தில் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜன், “‘விலங்கு’ வெப் தொடர் வெளியீட்டுவிழாவில் நான் ஒரு ப்ளாப் டைரக்டர், விமல் ஒரு ப்ளாப் நடிகர் இருவரும் சேர்ந்து ஒரு வெப் சீரிஸை எடுத்து இருக்கிறோம், அதை பார்த்து விட்டு எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள்’ என்றார். அதன்பின், ஒருவர் இந்த ‘விலங்கு’ வெப் தொடர்பு பற்றி என்னிடம் கூறினார். நான் ‘மாமன்னன்’ படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது, தினமும் இரவில் இந்தத் தொடரைப் பார்த்தேன். உண்மையில் ஒவ்வொரு எபிசோடிலும் திருப்பங்கள் இருந்தது. அதைப் பார்த்து நான் வியந்து போனேன், அதில் நான் யூகிக்க முடியாத பல விஷயங்கள் இருந்தது. இப்படிப்பட்ட ஒருவர் தற்போது மாமன் படத்தை இயக்கியிருக்கிறார்” என்று வாழ்த்துப் பேசி இருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…