
இந்தியா – பாகிஸ்தான் எல்லை மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 இடங்களை குறி வைத்து தகர்த்துள்ளது இந்திய ராணுவம். இந்த 9 இடங்களும் தீவிரவாதிகளின் பகுதி என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தாக்குதலுக்கு இந்திய அரசு, ‘ஆபரேஷன் சிந்தூர் (Operation Sindoor)’ என்று பெயரிட்டுள்ளது.
கடந்த மாதம், காஷ்மீர் பஹல்காமில் நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்கு பதிலடி தான் இந்திய ராணுவத்தின் இந்த நடவடிக்கை.
பஹல்காம் தாக்குதல் நடந்தப் போதிலிருந்தே, இந்தியா மாநிலங்களில் உள்ள ஆளும் கட்சிகள், எதிர்க்கட்சிகள் என அனைத்தும் மத்திய அரசுக்கு உறுதுணையாக நிற்போம் என்று கூறியிருந்தது.
இதை தான் மத்திய எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியும் கூறிவந்தார். அதாவது, ‘இந்தியா எந்த நடவடிக்கை எடுத்தாலும், அதற்கு, நாங்கள் துணை நிற்போம்’ என்பது தான் அது.
ராகுல் காந்தியின் பதிவு
இதைத் தொடர்ந்து, இந்தியாவின் ‘ஆப்பரேஷன் சிந்தூருக்கு’ ஆதரவளித்து, “ஆயுத படையை நினைத்து பெருமை கொள்கிறேன். ஜெய் ஹிந்த்!’ என்று தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார் ராகுல் காந்தி.