
பெங்களூரு/ஹைதராபாத்: கர்நாடகாவில் கடந்த 2011-ல் எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சியில் ஜனார்த்தன ரெட்டி சுற்றுலா, தொழில்துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது அவர் கர்நாடகாவில் பெல்லாரி, பீஜாப்பூரிலும், ஆந்திராவில் அனந்தப்பூரிலும் சுரங்க நிறுவனங்களை நடத்தி வந்தார். இந்நிலையில் இரும்பு தாதுக்களை சட்ட விரோதமாக வெளிநாடுகளுக்கு கடத்தியதாக ஜனார்த்தன ரெட்டி மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது.
கடந்த 14 ஆண்டுகளாக நடைபெற்றுவந்த இவ்வழக்கில் ஹைதராபாத் சிபிஐ நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்த‌து. இந்த தீர்ப்பில், ‘‘ஓபலாபுரம் சுரங்க நிறுவனத்தின் இயக்குநர் னிவாச ரெட்டி, சுரங்க அதிபர் ஜனார்த்தன ரெட்டி, அவரது உதவியாளர் மெக்ரூஃப் அலி கான், சுரங்கத் துறையின் முன்னாள் இயக்குநர் வி.டி. ராஜகோபால் ஆகியோர் குற்றவாளிகளிகளாக கருதப்படுகின்றனர்.