ஆப்பரேஷன் சிந்தூர் (Operation Sindoor) – ஜம்மு காஷ்மீர் தீவிரவாத தாக்குதலுக்கு இந்தியாவின் பதிலடி. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 இடங்கள் இந்த ராணுவ தாக்குதலில் நடத்தப்பட்டுள்ளது.

இந்த ராணுவ நடவடிக்கையில், ‘பாகிஸ்தானின் ராணுவப் பகுதி எதுவுமே தாக்கப்படவில்லை’ என்று இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் கூறியுள்ளது.

இந்தியா நடத்திய இந்தத் தாக்குதல் முழுக்க முழுக்க இந்திய மண்ணில் இருந்துதான் நடத்தப்பட்டுள்ளது. இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்குள்ளோ, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் சென்றோ இந்தத் தாக்குதலை நடத்தவில்லை.

இந்திய ராணுவம்

அப்புறம் எப்படி இந்தத் துல்லிய தாக்குதல்கள் சாத்தியம் என்ற கேள்வி எழலாம்.

இந்திய ராணுவம் தனது ஆயுதங்களைப் பயன்படுத்தி இந்தத் தாக்குதலை நடத்தி முடித்துள்ளது. அவற்றின் விவரம் இதோ…

ஸ்கால்ப்: இது வான்வழித் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்படும். சுமார் 250 கி.மீ-க்கும் அதிகமான தூரத்திற்குச் சென்று துல்லிய தாக்குதல் நடத்தும் ஏவுகணை இது.

லாய்ட்டரிங் முனிஷன்: இது ஒரு வகை டிரோன் ஆகும். இது குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று வட்டமடித்துத் தாக்குதல் நடத்தும். இது தானாகவும் இயங்கும் அல்லது இதை மனிதர்கள் மூலமும் இயக்கலாம்.

ஹேமர்: இதன் விரிவாக்கம் Highly Agile Modular Munition Extended Range. இது ஒரு ஸ்மார்ட் வெடிகுண்டு ஆகும். இந்த வெடிகுண்டு பதுங்கு குழிகள், கடினமான உள்கட்டமைப்பைக் கொண்ட கட்டடங்கள் போன்றவற்றைத் தாக்கும் வல்லமை கொண்டது. இது 50 – 70 கி.மீ தூரத்திற்குச் சென்று தாக்கும்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *