
பெண்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் அல்லது துஷ்பிரயோகங்களைப் ஊக்குவிக்கும் அல்லது அமைதியாக இருக்கும் எந்தவொரு நபரும் உண்மையான தலைவர் என்று அழைக்கப்படுவதற்குத் தகுதியற்றவர் என்று திவ்யா சத்யராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவு: “உங்களுக்கு விஜய் பிடிக்குமா அல்லது அஜித் பிடிக்குமா என்று என்னிடம் சிலர் கேட்கின்றனர். நான் எப்போதும் சொல்வதைப் போல எனக்கு அஜித் பிடிக்கும். அவர் மிகச் சிறந்த நடிகர். மிக முக்கியமாக அவர் பெண்களை மதிக்கிறார். அவர் ஒரு குடும்பத் தலைவர். அவர் தனது வாழ்க்கையில் பெண்களை மிகுந்த மரியாதையுடன் நடத்துகிறார். மேலும் அவரது ரசிகர்கள் அவரை போற்றிப் பின்பற்றுகிறார்கள்