
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆப்பரேஷன் சிந்தூரைக் கையிலெடுத்து உள்ளது இந்தியா.
இன்று அதிகாலை நடத்தப்பட்ட இந்த ஆப்பரேஷனில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள 9 தீவிரவாத இடங்களைக் குறிவைத்துத் தாக்கியிருக்கிறோம் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
அது எந்தெந்த இடங்கள் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அவை…
1. மர்கஸ் சுப்ஹான் அல்லா, பஹவல்பூர் – ஜே.இ.எம் (JeM)
2. மார்கஸ் தைபா, முரிட்கே – எல்.இ.டி (LeT)
3. சர்ஜால், தெஹ்ரா கலான் – ஜே.இ.எம்
4. மெஹ்மூனா ஜோயா, சியால்கோட் – எச்.எம்(HM)
5. மர்கஸ் அஹ்லே ஹதீஸ், பர்னாலா – எல்.இ.டி
6. மர்கஸ் அப்பாஸ், கோட்லி – ஜே.இ.எம்
7. மஸ்கர் ரஹீல் ஷாஹித், கோட்லி – எச்.எம்
8. ஷவாய் நல்லா கேம்ப், முசாபராபாத் – எல்.இ.டி
9. சையத்னா பிலால் முகாம், முசாபராபாத் – ஜே.இ.எம்
ஜே.இ.எம் என்பது ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத குழுவையும், எல்.இ.டி என்பது லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத குழுவையும், எச்.எம் என்பது ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாத குழுவையும் குறிக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb