
புதுடெல்லி: முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு தொடர்பான மேற்பார்வை குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் முல்லை பெரியாறு அணை கட்டப்பட்டது. இந்த அணை கேரள எல்லைப் பகுதியான இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது. தமிழக பொதுப் பணித் துறை அணையைப் பராமரித்து வருகிறது. முல்லை பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணை கட்ட வேண்டும் என்று கேரளா நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகிறது.