
வெற்றிமாறனின் `விடுதலை’ படத்தில் கதை நாயகனாகச் சூரிக்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து, `கொட்டுக்காளி’, `கருடன்’ எனத் தொடர்ந்து ஹிட் கொடுத்தார் நடிகர் சூரி.
இதையடுத்து பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் சூரி நடித்த ‘மாமன்’ திரைப்படம் வரும் மே 16ம் தேதி திரையரங்குகளில் வெளியாகக் காத்திருக்கிறது.
இயக்குநர் பாண்டியராஜி உதவி இயக்குநராக இருந்தவர் பிரசாந்த் பாண்டிராஜ். தாய்மாமனின் கதையாக உருவாகியிருக்கும் இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி குடும்பங்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
இதன் வெளியீட்டையொட்டி இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றிருந்தது.
இவ்விழாவில் பேசிய இப்படத்தின் இயக்குநர் பிரசாந்த் பாண்டிராஜ், “இது தாய்மாமன் உறவு பற்றிய கதை மட்டுமல்ல, எல்லா உறவுகளுக்குமான கதை. எல்லாரும் இந்தக் கதை வழியாக தங்களைத் தொடர்புப்படுத்திப் பார்க்கக் கூடிய கதை.
‘விலங்கு’ மாதிரியான திர்ல்லர் படத்த எடுத்துட்டு, அதேமாதிரி திரில்லர் பண்ணாம, கொஞ்சம் இதயத்திற்கு இலகுவான படம் பண்ணலாம்னுதான் இந்தப் படத்த பண்ணுனேன்.
ஒரு பெரிய தோல்விப் படத்துக்குப் பிறகு என்னைக் கடலுக்கு அடியில் பொதச்சுட்டாங்க. என் மேல் நம்பிக்கை வைத்து ‘விலங்கு’ வெப்சீரிஸ் கொடுத்த மதன், ஐயப்பன் அண்ணன்களுக்கு நன்றி.
அந்த வெப்சீரிஸை வரவேற்று, பாராட்டி, மக்களிடம் கொண்டு சேர்த்து, பிரபலமாக்கிய பத்திரிக்கையாளர்கள், யூடியூப்பர்கள், மீம் கிரியேட்டர்கள் அனைவருக்கும் மிகப்பெரிய நன்றி.
அவர்களால்தான் அந்த வெற்றி சாத்தியமானது. தோல்விக்குப் பிறகு நான் மீண்டு வருவதற்கு அதுவே பெரிய உதவிய இருந்தது. ‘புரூஸ்லி’ படத்தைக் கடுமையாக விமர்சித்தவர்கள், ‘விலங்கு’ படத்தைக் கொண்டாடித் தீர்த்தனர்” என்றார்.
இதைத்தொடர்ந்து “நான் என் குடும்பத்தை நிறையக் காயப்படுத்தி இருக்கிறேன். முக்கியமாக என் மனைவியை நிறையக் காயப்படுத்தி இருக்கிறேன்.
இந்த மேடையில் அவரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். இந்தப் படத்தை அவருக்கே சமர்ப்பிக்கிறேன்” என்று கண்ணீருடன் பேசியிருக்கிறார் இயக்குநர் பிரசாந்த் பாண்டிராஜ்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…