‘ஆப்பரேஷன் சிந்தூர்!’

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலுள்ள தீவிரவாத முகாம்கள் மீது ‘ஆப்பரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்திய இராணுவம் தாக்குதல் நடத்தியிருக்கிறது. இதனைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கிடையேயும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்த விவகாரத்தில் கருத்து கூறியிருக்கிறார்.

Operation Sindoor

‘ட்ரம்ப் ரியாக்சன்!’

பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், ‘இது ஒரு அவமானம். எங்களுக்கு அதைப் பற்றி இப்போதுதான் தெரிய வந்தது. கடந்த காலங்களில் நடந்தவற்றை வைத்து எதோ ஒன்று நடக்கப் போகிறது என்பது அனைவருக்குமே தெரிந்திருந்தது.

அவர்கள் நீண்ட காலமாக சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் சண்டை பல தசாப்தங்களாக நீள்கிறது. அந்த சச்சரவுகளெல்லாம் வெகு விரைவில் தீரும் என நம்புகிறேன்.’ என்று ட்ரம்ப் பேசியிருக்கிறார்

Donald Trump
Donald Trump

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்புப் பகுதிகளிலுள்ள 9 தீவிரவாத முகாம்கள் மீது இந்திய இராணுவம் தாக்குதல் நடத்தியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *