
வெற்றிமாறனின் `விடுதலை’ படத்தில் கதை நாயகனாகச் சூரிக்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து, `கொட்டுக்காளி’, `கருடன்’ எனத் தொடர்ந்து ஹிட் கொடுத்தார் நடிகர் சூரி.
இதையடுத்து பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் சூரி நடித்த ‘மாமன்’ திரைப்படம் வரும் மே 9ம் தேதி திரையரங்குகளில் வெளியாகக் காத்திருக்கிறது.
இயக்குநர் பாண்டியராஜி உதவி இயக்குநராக இருந்தவர் பிரசாந்த் பாண்டிராஜ். தாய்மாமனின் கதையாக உருவாகியிருக்கும் இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி குடும்பங்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
இதன் வெளியீட்டையொட்டி இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றிருந்தது.
இவ்விழாவில் பேசிய இயக்குநர் பாண்டிராஜ், “நானும் சூரியும் ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்தில்தான் அறிமுகமாகி பழக்கமானோம்.
படத்தை ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி பூஜை போட்டுறலாம்னு விமல், சிவகார்த்திகேயன், தயாரிப்பாளர் எனக் கொஞ்சப் பேர்தான் போனோம்.
அப்போ நான் அழைக்காமலே விமலுடன் காரிலிருந்து இறங்கி வந்தார் சூரி.
அந்தப் படத்தில் நடிக்கக் கூப்பிடவில்லை. அவராகவே வந்தார்.
அவரைப் பார்த்துட்டு ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கலாம்னு அதுக்கு அப்புறம்தான் ப்ளான் பண்ணினேன்.

சும்மா காஸ்ட்யூம் மாத்த சொன்னேன். வரும்போதே காஸ்ட்யூம் எடுத்திட்டு வந்து, விமல் கிட்ட இருந்த காஸ்ட்யூமை மாத்திட்டு வந்தார்.
சூரியோட அந்த தன்னம்பிக்கை, முயற்சி எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. அப்போது அவரையும் வைத்து போட்டோ ஷூட் எடுத்தேன்.
அந்த தன்னம்பிக்கை, முயற்சிதான் அவரை மேல மேல கொண்டு போய்ட்டே இருக்கு” என்றார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…