
செங்கல்பட்டு: வன்னியர் சங்கம் சார்பில் மாமல்லபுரத்தில் வரும் 11-ம் தேதி நடைபெற உள்ள சித்திரை முழு நிலவு பெருவிழா மாநாடு நடைபெறவுள்ளது. இந்நிலையில் அன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் அனைத்து வகை டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் மூடப்படும் என்று ஆட்சியர் ச. அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
வன்னியர் சங்கம் மற்றும் பாமக சார்பில் மாமல்லபுரத்தில் கடந்த 2013-ம் ஆண்டு ஏப்ரல் 25-ம் தேதி சித்திரை முழுநிலவு மாநாடு நடைபெற்றது. இந்நிலையில் வன்னியர் சங்கத்தின் சித்திரை பவுர்ணமி வன்னியர் இளைஞரணி மாநாடு 12 ஆண்டுகளுக்குப் பிறகு மே 11-ம் தேதி நடைபெறவுள்ளது. செங்கல்பட்டு மற்றும் தாம்பரம் மாநகர காவல் துறை சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.