RCB அணியின் பாட்காஸ்டில் கலந்துகொண்டு பேசிய விராட் கோலி தனது கிரிக்கெட் கெரியரின் பல அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.

முதல் முறையாக ஆர்சிபி அணிக்காக விளையாடும்போதும் அணில் கும்ப்ளே, டிராவிட் போன்ற போன்ற இந்திய ஜாம்பவான்கள் மத்தியில் எப்படி நடந்துகொள்வது, எப்படி விளையாடுவது எனப் பதட்டமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

வெளிநாட்டு வீரர்கள், தங்களுடன் ஏற்கெனவே விளையாடிய இந்திய வீரர்களுடன் நெருக்கமான உறவைக் கொண்டிருந்ததாகவும், தான் இந்திய ஜாம்பவான்களிடம் நல்லபடியாக நடந்துகொள்வதில் கவனம் செலுத்தியதாகவும் விராட் பேசினார்.

RCB

ஆனால் ஒரு வெளிநாட்டு வீரர் மட்டும் விராட் விளையாடும் விதத்தைப் பார்த்து, அவரது பேட்டிங்கை மேம்படுத்த உதவியிருக்கிறார். அவர்தான் மார்க் பவுச்சர்.

மார்க் பவுச்சர் பற்றி Virat Kohli

இவரைப் பற்றி விராட் பேசுகையில், “நான் அதுவரை விளையாடிய அனைத்து வீரர்களிலும், மார்க் பவுச்சர்தான் சிறுவனாக இருந்த என் மீது பெரும் தாக்கம் செலுத்தினார்.

அவர் மட்டும்தான் ‘நான் அங்குச் சென்று சில இளம் இந்திய வீரர்களுக்கு உதவப் போகிறேன்’ என்ற மனநிலையுடன் ஐபிஎல்லுக்கு வந்தார்.

நான் விளையாடிய விதத்தைப் பார்த்து எனக்குள் இருந்த ஆற்றலைக் கண்டறிந்தார். என் பலவீனங்களை உணர்ந்து நான் அவற்றைச் சரிசெய்ய வழிகாட்டினார்.

நான் ஒரு வார்த்தை கூட கேட்காமலேயே, ‘நீ அடுத்த லெவலுக்குப் போக வேண்டுமென்றால், இதையெல்லாம் செய்ய வேண்டும்’ என எடுத்துரைத்தார்.” என்றார்.

Virat Kohli
Virat Kohli

டென்னிஸ் பாலில் பயிற்சி அளித்த மார்க் பவுச்சர்

மார்க் பவுச்சர் அளித்த பயிற்சிகள் குறித்து, “ஒரு நாள் என்னை நெட்ஸுக்கு அழைத்துச் சென்றார். ‘நீ ஷார்ட் பால்களை அடிக்கப் பழக வேண்டும். உன்னால் ஷார் பால்களை புல் ஷாட் அடிக்க முடியவில்லை என்றால் யாரும் உனக்குச் சர்வதேச போட்டிகளில் வாய்ப்பளிக்க மாட்டார்கள்’ என்று கூறினார்.

டென்னிஸ் பாலில் எனக்கு வேகமாக ஷார்ட் பால்களை வீசினார். அந்த வேகத்தில் வரும் பந்துகளை அடிக்க முடியவில்லை என்றால் என்னால் அடுத்த லெவலுக்குச் செல்லவே முடியாது போல என நினைத்தேன்.

ஆனால் அவர் என்மீது நம்பிக்கை வைத்தார். நான் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறினேன். கொஞ்சம் நன்றாக விளையாடத் தொடங்கினேன்” என்றார்.

உன்னை இண்டெர்நேஷனல் கிரிக்கெட்டில் பார்க்காவிட்டால்…

மேலும் விராட், “நாங்கள் சென்னையிலோ, கொல்கத்தாவிலோ விளையாடிக் கொண்டிருந்தபோது பவுச்சர் என்னிடம், ‘நான் அடுத்தமுறை இன்னும் 4 ஆண்டுகளில் கமண்டேடரிக்காக இந்தியா வரும்போது நீ சர்வதேச போட்டிகளில் விளையாடவில்லை என்றால், அது நீயே உனக்குச் செய்துகொள்ளும் அவமதிப்பு’ என்றார்.

அவருடனான உரையாடல்களின்போது என்னை மலைக்க வைத்திருக்கிறார். அந்த உரையாடல்கள்தான் நான் தொடர்ந்து சிறப்பாக விளையாடும் திசைக்கு என்னை உந்தித்தள்ளின.” என்றும் விராட் தெரிவித்துள்ளார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *